முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பெயரில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண் ஊராட்சி மன்ற தலைவியிடம் இருந்து 77 லட்சம் மோசடி செய்துள்ளதாக அந்த பெண் ஊராட்சி மன்ற தலைவர் போலீசில் புகார் கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தின் நரியம்பட்டு ஊராட்சி மன்றத்தின் தலைவராக பாரதி என்ற பெண் இருக்கின்றார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் அவர், “முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தான் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவிக்கு வேலைக்கு ஆள் எடுப்பதாக என்னிடம் சிலர் கூறினர்.
அந்த பதவியை எனக்கு வாங்கித் தருவதாக கூறி என்னிடம் 77 லட்சம் ரூபாயை கடந்த மாதத்தில் கைது செய்யப்பட்ட போலி ஐஏஎஸ்ஸான சசிகுமார், ராஜலட்சுமி மற்றும் அவரது கணவர் புவனேஷ் ஆகிய மூன்று பேரும் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.