ஆடம்பரமான வாழ்க்கையை லண்டனில் வாழ்ந்து வந்த பெண்மணி, டாக்சி ஓட்டுனருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் வசித்து வந்த பெண்ணுக்கு, திருமணம் முடிந்து 17 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு கணவர், குழந்தைகள் உள்ளனர். அனைவரும் தற்போது இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்தாண்டு பெண்ணின் தாய் உயிரிழந்த நிலையில், இறுதிச்சடங்கிற்காக அந்த பெண் ஹைதராபாத் வந்திருந்தார். அங்கு டாக்சியை புக்கிங் செய்து பயணித்த போது, ஓட்டுநர் சிவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் தங்களின் செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்ட நிலையில், நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. கடந்த செப். 16 அன்று பெண்ணின் கணவருடைய அம்மா இறந்துள்ளார். இதனால் அனைவரும் இந்தியா வந்துள்ளனர். இதற்கிடையே, தனது கணவரை செப்.30ஆம் தேதி தவிக்கவிட்ட பெண்மணி, ரகசியமாக ஹைதராபாத் சென்று சிவாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், தனது மனைவியை கணவர் தேடியபோது, அவர் ஹைதராபாத் சென்றது தெரியவந்தது.
பின் இந்த விஷயம் குறித்து கணவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், கோவாவில் இருந்த பெண்ணை மீட்டு லண்டனுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், டாக்சி ஓட்டுநர் சிவா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : சுபாஷே..!! பைக்கில் சென்றவர் மீது காரை விட்டு ஏற்றிய மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்..!! டிரைவிங் லைசன்ஸ் ரத்து..!!