fbpx

திருமணமான தங்கையுடன் கள்ளக்காதல்..!! வெறியான அண்ணன்..!! கூலிப்படையை இறக்கி தீர்த்துக் கட்டிய கொடூரம்..!!

தனது தங்கையுடன் கள்ள உறவு வைத்திருந்தவரை வெட்டிக் கொன்ற சம்பவம் தொண்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கடற்கரை கிராமங்களில் தீபாவளி பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த பகுதியில் ராட்டினம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து ஆண்டுதோறும் தொழில் செய்து வருகின்றனர். அந்த வகையில், பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தொண்டி பகுதியில் ராட்டினம் போட்டு தொழில் செய்து வருகிறார்.

இதற்கிடையே, அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார், நம்புதாளை பகுதியில் ராட்டினம் அமைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், சரவணன் தங்கை யசோதா திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், முத்துக்குமாருக்கும், யசோதாவுக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.

இதனை சரவணன் கண்டித்ததால், முத்துக்குமார் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், நம்புதாளைப் பகுதியில் முத்துக்குமார் நடந்து சென்றபோது 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர். அவரை தடுக்க வந்த முத்துகுமாரின் அம்மாவுக்கும் வெட்டு விழுந்த நிலையில், முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்த கும்பல் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் தப்பியோடிவிட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தொண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து முத்துக்குமாரின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கூலிப்படையை வைத்து முத்துக்குமாரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பந்தமாக 2 பேரை கைது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை..!! மாதம் ரூ.35,000 சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

The incident of hacking to death a man who had an adulterous relationship with his younger sister has shocked the Thondi area.

Chella

Next Post

பந்திபோரா ராணுவ முகாம் மீது தீவிரவாத தாக்குதல்!. பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி!. தப்பியோடிய பயங்கரவாதிகள்!

Sat Nov 2 , 2024
Terrorist attack on Bandipora army camp! The security forces responded appropriately! Escaped terrorists!

You May Like