fbpx

இத்தனை ஆண்களுடன் கள்ளத்தொடர்பா..? அதிர்ந்துபோன கணவர்..!! எஸ்ஐ முதல் தாசில்தார் வரை..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமணி (32). இவர், திருமணமாகி விவகாரத்து பெற்ற நிலையில், தன்னுடைய மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். விருத்தாசலத்தில் வேலை பார்த்து வரும் இவர், அடிக்கடி ஆட்டோவில் சென்று வரும்போது ஆட்டோ ஓட்டுநர் அசோக் குமாருடன் ரமணிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காதலாக மாறிய நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிக்கு 9 மற்றும் 5 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள், அனைவரும் புல்லூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். 2 நாட்களுக்கு முன்பு அவரது தாய், மகள் ரமணிக்கு போன் செய்திருக்கிறார். அவர் எடுக்காததால் மருமகன் அசோக் குமாருக்கு போன் செய்துள்ளார். ஆனால், இருவருமே போனை எடுக்காததால், சந்தேகமைடந்த ரமணியின் தாய், மகள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த போலீசார், ரமணியின் சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த குழந்தைகளையும் காணாததால், அசோக் குமாரின் செல்போன் எண்ணுக்கு போலீசார் போன் செய்துள்ளனர். அது அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த போலீசார், தலைமறைவாக இருந்த அசோக் குமாரை பிடித்து விசாரிக்கும்போது, அவர் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதுதொடர்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில், ”பட்டா வாங்குவதற்காக, குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். அப்போது அங்கிருந்த துணை தாசில்தார் ஒருவருடன் பழகிய ரமணி, அவருடன் நெருக்கமாக இருந்தார். அது குறித்துக் கேட்டபோது, சும்மாதான் பேசுகிறேன் என்றார். ஆனால், இருவரும் நெருங்கிப் பழகியதை கண்டுபிடித்தேன். இதையடுத்து, சமீபத்தில் சிறிய விபத்து ஒன்றில் சிக்கிய ரமணியை, போலீஸ் உதவி எஸ்ஐ ஒருவர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதிலிருந்து அந்த எஸ்ஐயிடம் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்.

இவர்கள் தவிர போலீஸ் ஏட்டு ஒருவருடனும் பழக்கம் இருந்துள்ளது. செல்லும் இடத்திலெல்லாம் ஆண்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு பேசுவது, குறித்து ரமணியிடம் கேட்டேன். அதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வந்தது. கடந்த 19ஆம் தேதி நான் வீட்டிற்கு செல்லும்போது, யாரோ ஒரு ஆணிடம் ரமணி பேசிக் கொண்டிருந்தார். அப்போது நடந்த வாக்குவாதத்தில், அவளை அடித்துவிட்டு வெளியே வந்துவிட்டேன். பிறகும், ஆண் நட்புகளுக்கு இடையூறாக இருக்கும் கணவனை, ஆண் நண்பர்களை வைத்தே மனைவிகள் கொலை செய்யும் செய்திகளை அடிக்கடி பார்த்திருக்கிறேன்.

அப்படி ரமணி என்னை கொலை செய்து விடுவாளோ என்று பயத்து, அவளுக்கு முன்பு நான் முந்திக் கொண்டேன். லெஸ்சியில் தூக்க மாத்திரையை கலந்து எடுத்துக் கொண்டு, மீண்டும் வீட்டுக்குச் சென்றேன். சமாதானப்படுத்தி அதை குடிக்க வைத்தேன். அவள் தூங்கியதும் தலையனையை முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு, குழந்தைகளை அழைத்து சென்றுவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : கொட்டிக் கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

I convinced him to drink it. When she fell asleep I put the pillow on her face and killed her and took the children away

Chella

Next Post

அதிர்ச்சி..!! அரசுப் பள்ளியில் அடிதடி..!! பரிதாபமாக உயிரிழந்த 11ஆம் வகுப்பு மாணவன்..!!

Sat Aug 24 , 2024
The death of a student after students attacked each other in a government school has come as a shock.

You May Like