fbpx

கள்ளக்காதலனுடன் வாழ்ந்து கொண்டே வேறொருவருடன் கள்ளக்காதல்..!! கடைசியில் நடந்த அதிர்ச்சி.!!

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செகனஸ். இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார். செகனஸ்சின் நிலையை அறிந்து கொண்ட தாதகாப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாதேஷ் என்பவர், செகனஸிடம் ஆசைவார்த்தை கூறி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். நாளடைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில், செனஸ்க்கு அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை மாதேஷ் கண்டித்துள்ளார்.

இருப்பினும் இருவருக்கும் இடையேயான கள்ள உறவு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக மாதேஷ், செகனஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே காதலியின் கழுத்தை நெரித்து மாதேஷ் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த செகனஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஆட்டோ ஓட்டுநரான மாதேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

முன்னாள் காதலியை மறக்காத சிம்பு..!! ’பத்து தல’ இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்யம்..!!

Mon Mar 20 , 2023
நடிகர் சிம்புக்கு தற்போது தொட்டதெல்லாம் பொன்னாகிறது. அதாவது சிம்புவின் படங்கள் தொடர் வெற்றி அடைந்து வருவதால், அவரது மார்க்கெட் உச்சம் தொட்டுள்ளது. அதுமட்டுமின்றி சம்பளத்தையும் தற்போது உயர்த்தி உள்ளார். இந்நிலையில், மார்ச் 30ஆம் தேதி சிம்புவின் பத்து தல படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ரசிகர்களிடம் சிம்பு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது எனக்காக இனிமேல் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் […]

You May Like