fbpx

கறை படிந்த பாத்ரூம் மற்றும் டாய்லெட்டை இப்படி சுத்தம் செஞ்சி பாருங்க.! பளீச் பளீச்.!

ஒவ்வொருவரும் நம் வீட்டின் ஹால் மாடி மற்றும் சமையலறை ஆகியவற்றை சுத்தமாக வைத்திருப்பது போல கழிவறை மற்றும் பாத்ரூம் ஆகியவற்றையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். ஏனென்றால் இவற்றில் இருந்து கிருமிகள் உருவாகி நோய்கள் ஏற்படுத்துவதை தடுக்க முடியும். நமது வீட்டின் கழிப்பறை மற்றும் பாத்ரூம் ஆகியவற்றை வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான பொருட்களைக் கொண்டே எவ்வாறு பளிச்சிட செய்யலாம் என பார்ப்போம்.

இந்த எளிமையான கிளீனரை செய்வதற்கு 2 பாக்கெட் சீயக்காய் 1 பாக்கெட் ஷாம்பூ 1/4 கப் புளித்த மோர் மற்றும் 1 ஸ்க்ரப்பர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரம் எடுத்து அதில் சீயக்காய் ஷாம்பூ மற்றும் புளித்த மோர் ஆகியவற்றை நன்றாக கலக்க வேண்டும். இந்தக் கலவை தயாரானதும் பாத்ரூம் மற்றும் கழிவறையில் உப்பு மற்றும் கறை படிந்துள்ள இடத்தில் தெளிக்க வேண்டும்.

பின்னர் ஸ்கிரப்பர் கொண்டு நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். சிறிது நேரம் ஸ்க்ரப்பர் வைத்து தேய்த்து கழுவிய பின்பு ஒரு பத்து நிமிடத்திற்கு அப்படியே ஊற விட வேண்டும். இப்போது தண்ணீர் ஊற்றி பாத்ரூமை கழுவினால் டைல்ஸ் மற்றும் டாய்லெட் பளிச்சிடும் விதத்தில் இருக்கும்.

இவற்றிற்கு கெமிக்கல்கள் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் தயாரிக்கும் இது போன்ற பொருட்களை பயன்படுத்தும் போது நமது தோல் மற்றும் சுவாச நலமும் பாதுகாக்கப்படுகிறது. இவை இயற்கையான பொருள்கள் என்பதால் அரிப்பு மற்றும் எந்தவித சங்கடங்களையும் ஏற்படுத்தாது.

Kathir

Next Post

செந்தில் பாலாஜிக்கு தொடரும் சிக்கல்!… இதுதான் கடைசி வாய்ப்பா?… ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Mon Nov 20 , 2023
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை வாசம் அனுபவித்து வந்தார். இந்தநிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 19ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து, செந்தில் பாலாஜி சார்பில் […]

You May Like