fbpx

“சார், கெமிஸ்ட்ரி டீச்சர் என்னோட கைய கடிச்சுட்டா” அழுது புலம்பிய H.M..

முன்பெல்லாம் பல மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தான் முன்மாதிரியாக இருந்தனர். ஆசிரியர்களை பார்த்து நான் இவரை போன்று முன்னேற வேண்டும் என்ற ஆசையில் வாழ்கையில் முன்னுக்கு வந்தவர்கள் அநேகர். ஒரு பக்கம் மாணவர்கள் ஆசிரியர்களை கொலை செய்வது, தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் அதே சமயம், ஆசிரியர்கள் குழந்தைகள் போல் ஒருவரை ஒருவர் தாக்கி தங்களின் மரியாதையை கெடுத்து விடுகின்றனர். அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரம் பகுதியில் அரசு மேல் நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில், ரத்தின ஜெயந்தி என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். மேலும், கண்ணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டெல்லா ஜெய செல்வி என்பவர் வேதியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர்களை ஆபாசமாக திட்டி வந்துள்ளார். அந்த வகையில் தளபதிசமுத்திரம் கீழுர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரை வழக்கம் போல் இவர் ஆபாசமாக திட்டியுள்ளார்.

இந்நிலையில், ஆசிரியை ஆபாசமாக திட்டியதால் மனம் உடைந்த மாணவன், இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவனின் பெற்றோர், தலைமை ஆசிரியையிடம் ஆசிரியை ஜெயசெல்வி குறித்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தி, ஸ்டெல்லா ஜெயசெல்வியிடம் விளக்கம் கேட்டு, மெமோ கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை ஜெயசெல்வி, மெமோவை கிழித்து எரிந்துவிட்டு, ரத்தின ஜெயந்தியை ஆபாசமாக பேசியதோடு அவரை தாக்கியுள்ளார். அது மட்டும் இல்லாமல், அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பிடுங்கி, கையில் கடித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர், இது குறித்து ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ஆசிரியையிடம் இருந்த தங்க சங்கிலியை மீட்டு தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, வேதியியல் ஆசிரியை மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் விசாரணை நடத்தியுள்ளார்.

Maha

Next Post

மக்களே இன்றே கடைசி நாள்...! இந்த வேலையை செய்யவில்லை என்றால் சிக்கல்...! முழு விவரம்

Sat Sep 30 , 2023
பான்- ஆதார் இணைப்பு: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. ஆனாலும் பலர் இதனை இணைக்காமல் உள்ளதால் மத்திய அரசு தொடர்ந்து இதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வருகிறது. பான்- ஆதார் இணைக்காத நபர்கள் இன்றைக்குள் இணைக்க வேண்டும். இணைக்காத நபர்களின் வங்கி […]

You May Like