fbpx

விமான மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.1.32 கோடி மதிப்புள்ள 2.49 கிலோ தங்கம் பறிமுதல்…!

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 1.32 கோடி மதிப்புள்ள 2.49 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

உளவுத்துறை தகவலின் அடிப்படையில், 03.05.2023 அன்று 6e-1172 என்ற விமானத்தில் கொழும்பிலிருந்து வந்த இலங்கை பாஸ்போர்ட் வைத்திருந்த இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். ஒவ்வொரு பயணியின் உடலிலும் அரிசி வடிவில் தங்கம் அடங்கிய இரண்டு மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 524 கிராம் மற்றும் 518 கிராம் எடையுள்ள 55.36 லட்சம் மதிப்புடைய 24 காரட் தூய்மையான இரண்டு தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன.

மற்றொரு சோதனையில், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், 03.05.2023 அன்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானம் எண். 6e -1002 இல் வந்திறங்கிய இரண்டு பெண் பயணிகளிடமிருந்து 300 கிராம் மற்றும் 400 கிராம் எடையுள்ள 24 காரட் எடையுள்ள 37.19 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அதே நாள் எமிரேட்ஸ் விமானம் எண். EK-546 இல் துபாயிலிருந்து வந்த ஒரு ஆணின் உடலில் மூன்று மூட்டைகளில் ரப்பர் பேஸ்ட் வடிவில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 39.58 லட்சம் மதிப்புள்ள 745 கிராம் எடையுள்ள 24K தூய்மையான ஒரு தங்கக் கட்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Vignesh

Next Post

இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!! நாளை இலவச தொழில் பயிற்சி மேளா..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Sun May 7 , 2023
இந்தியாவில் பிரதமர் மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் விதமாக திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு 15 லட்சம் பேருக்கு தொழில் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், மே 8ஆம் தேதி நாடு முழுவதும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பாக தேசிய தொழில் பழகுநர் மேளா நடைபெற உள்ளது. இதில், பல […]

You May Like