fbpx

சென்னையில் இன்று முதல் 3 நாட்கள்.. ட்ரோன்கள் பறக்க தடை… காவல்துறை அறிவிப்பு..

சென்னையில் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு நடைபெறுவதை ஒட்டி இன்று முதல் 3 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது..

சென்னையில் இன்று முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை ஜி20 கல்வி செயற்குழு மாநாட்டின் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.. இது தொடர்பாக மகாபலிபுரத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.. இந்த ஜி 20 மநாட்டில் 29 வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.. இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல், கன்னிமாரா, ஹயாத், தாஜ் கிளப் ஹவுஸ் ஆகிய இடங்களில் தங்க உள்ளனர்.. மேலும் நாளை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சி, ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நடைபெறும் கருந்தரங்கு ஆகியவற்றில் அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர்..

எனவே இன்று முதல் 2-ம் தேதி வரை சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட மேற்கூறிய தங்கும் இடங்கள், விழா நடைபெறும் இடங்கள், பிரதிநிதிகள் பயணம் செய்யும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.. மேலும் அந்த பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது..

Maha

Next Post

பரபரப்பு...! ஆசிரமத்தில் வைத்து பெண் பலாத்காரம்...! ஆசாராம் பாபு குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு...!

Tue Jan 31 , 2023
தன்னைக் காட்டிக் கொள்ளும் கடவுள் ஆசாராம் பாபு பெண் சிஷ்யை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என குஜராத்தின் காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி டி.கே.சோனி, தண்டனையின் அளவை ஒத்திவைத்தார். ஆசாராம் மீது 2013ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் ஆசராமின் மனைவி உட்பட 6 பேரை நீதிமன்றம் விடுவித்தது. அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் படி, […]

You May Like