சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.60 லட்சம் வரி பணத்தை செலுத்த தவறியதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் சென்னை நங்கநல்லூரில் உள்ள வெற்றிவேல் மற்றும் வேலன் திரையரங்கத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2018ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை நங்கநல்லூரில் இயங்கி வரும் வெற்றிவேல் மற்றும் வேலன் திரையரங்கம் வரி செலுத்தவில்லை என புகார் எழுந்ததையடுத்து, பல முறை மாநகராட்சி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாத நிலையில், 2018ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வரி செலுத்தாததால், ரூ.60 லட்சம் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக வருவாய்த்துறை அதிகாரிகள் ௨ திரையரங்கத்திற்கு சீல் வைத்துள்ளனர்.
Read More: கோயிலில் வெடித்த சண்டை..!! அசிங்க அசிங்கமாக திட்டிய ஜிபி முத்து..!! வெளியான வீடியோ..!!