ஒரே நாள் மழைக்கு சென்னை மாநகரம் வெள்ளக்காடாகி தண்ணீரில் தத்தளிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நேற்று முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்களில் அலுவலகத்திற்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வரும் 4ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் மக்கள் பாதிக்கப்படுவதும் சாலையில் தண்ணீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஓடுவதும் நடந்து வருகின்றது. இதனால் மக்கள் பாதிப்புக்குள்ளாகிஉ ள்ளனர். சென்னை எழும்பூர், புரசைவாக்கம் , வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகின்றது.
தாம்பரம் பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது. வளசரவாக்கம், ராமாபுரம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி வருவதால் மழை நீர் தேங்கி சாலை முழுவதும் முழங்கால் அளவுக்கு பெருக்கெடுத்து ஓடுகின்றது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வடிகால்வாரியபணிகள் நிறைவடையாததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வருகின்றது.
மேலும் பல இடங்களில் பள்ளம் தோண்டி வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்களைத் தவிர்க்க பள்ளத்தை சுற்றி வேலிகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைஎழுந்துள்ளது. ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டிய பணி இன்னும் முடிவடையாத நிலையில் அடுத்த மழைக்குள்ளாவது முடிக்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.