fbpx

பெரும் சோகம்..!! சென்னை பெருவெள்ளம்..!! 5 பேர் பலி..!! காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

சென்னையில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டி போட்டுள்ளது. கடந்த 2015இல் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பை விட மிக்ஜாம் புயல் பாதிப்பு அதிகம் என கூறப்படுகிறது. அந்த அளவுக்கு சென்னை புறநகர் மட்டுமல்லாது சென்னை மத்திய முக்கிய பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது. மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய அரசு சார்பிலும், பல்வேறு தன்னார்வலர்களும், அரசியல் அமைப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர். தற்போது மிக்ஜாம் புயல் சென்னையை விட்டு விலகியதால், மழையின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், கனமழைக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மின்சாரம் தாக்கி லோன் ஸ்கொயர் சாலையில் பத்மநாபன் (50), துரைப்பாக்கத்தில் கணேசன் (70) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். மரம் விழுந்ததில் பெசன்ட் நகரில் முருகன் (35) என்பவர் உயிரிழந்தார். பட்டினம்பாக்கத்தில் அடையாளம் தெரியாத ஒருவரும், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய பகுதிகளிலும் அடையாளம் தெரியாத ஒருவரும் சாலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

'வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை’..!! ’சினிமா வசனம் போல் பேசாதீர்கள்’..!! விஷாலுக்கு மேயர் பிரியா பதிலடி..!!

Tue Dec 5 , 2023
சென்னை மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் துரிதகதியில் செய்யப்பட்டு வருவதாக, பிரியா ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மேயர் பிரியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “2015 அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல விஷால் பேசியிருக்கிறார். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்..! 2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பிறகும் ஐந்தரை ஆண்டுகளை ஆண்டது அதிமுக அரசுதான். […]

You May Like