fbpx

Chennai HighCourt: அமைச்சர் தங்கம் தென்னரசு மீது சொத்து குவிப்பு வழக்கு…! இன்று முதல் விசாரணை..! நீதிபதி அதிரடி

சொத்து குவிப்பு வழக்குகளில் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அமைச்சர்கள்தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை அடுத்து, அந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் மாதத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கின் விசாரணையை இன்று நடத்த உள்ளார். இந்த வழக்கின் விசாரணை இன்று மற்றும் நாளை, மார்ச் 5-ஆம் தேதி ஆகிய நாட்களில் நடைபெறும் என்று அறிவித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கின் விசாரணை மார்ச் 5 மற்றும் 6-ம் தேதிகளிலும், அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான வழக்கின் விசாரணை மார்ச் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த தேதிகளில் வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு வழக்கறிஞர்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மார்ச் 8-ம் தேதி வாதங்களை தொடங்கி 11-ம் தேதி நிறைவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

English Summary: Chennai HighCourt: Asset hoarding case against Minister Thangam South

Vignesh

Next Post

BJP: அண்ணாமலை சுழலில் திமுகவில் 10 விக்கெட்டுகள் கன்பார்ம்!… தேர்தலுக்குள் நடக்கும்!… சொன்னது யார் தெரியுமா?

Wed Feb 28 , 2024
BJP: அனில் கும்ப்ளே போல் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் திமுகவின் 10 விக்கெட்டுகளை அண்ணாமலை வீழ்த்துவார் என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த ஆண்டு தொடங்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‛என் மண் – என் மக்கள்’ என்ற யாத்திரை நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மிக பிரம்மாண்டமாக நிறைவு பெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். […]

You May Like