fbpx

பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை!… 2 நாட்கள் பிரமாண்ட ரோடு ஷோவில் பிரதமர் மோடி!

Modi: பிரதமர் மோடியின் வாகனப் பேரணி நடைபெற இருப்பதையொட்டி, சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைக்காக 6-வது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ளார். நாளை சென்னை வரும் பிரதமர் 2 நாட்கள் தங்கியிருந்து ஆதரவு திரட்டவுள்ளார். சென்னை பாண்டிபஜார் பகுதியில் நாளை வாகன பேரணி நடத்தவுள்ள பிரதமர் மோடி, தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், வடசென்னை பாஜக வேட்பாளர் பால கனகராஜ், மத்திய சென்னை பாஜக வேட்பாளர்வினோஜ் பி செல்வம் ஆகியோருக்காக வாக்கு சேகரிக்கவுள்ளார்.

இதன் பின்னர் புதன்கிழமை வேலூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பரப்புரை பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார். பிரதமர் மோடி வாகன பேரணி நடத்தவுள்ளதால், பாண்டி பஜாரில் பகுதியில் பிரதமரின் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். பாண்டிபஜார் மற்றும் தியாகராயநகர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே பிரதமரின் வருகையை முன்னிட்டு பாண்டி பஜாரில் நடைபெறும் முன்னேற்பாடுகள் குறித்து, தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்துவதாக கூறினார். மேலும், சென்னை இதுவரை பார்த்திராத பிரமாண்டமான கூட்டமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Readmore: இன்னைக்கு சூரிய கிரகணம் மட்டும் இல்ல!… அபூர்வ பங்குனி அமாவாசை!… கண்டிப்பா செஞ்சுடுங்க!

Kokila

Next Post

மின் நுகர்வோருக்கு குட் நியூஸ்..!! உங்கள் வங்கிக் கணக்கிற்கு மீண்டும் பணம் வருகிறது..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

Mon Apr 8 , 2024
தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, கூடுதல் கட்டண வசூலை உடனே நிறுத்துமாறு மின்வாரியத்துக்கு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்பு வழங்க பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதன்படி, ஒரு கிலோவாட் மேல்நிலை கேபிள் மூலம் மின் இணைப்பு பெற ரூ.2,040-ம், நிலத்தடி கேபிள் மூலம் மின் இணைப்பு பெற ரூ.5,110-ம் மேம்பாட்டு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், […]

You May Like