fbpx

கடல் மட்டம் உயர்வால் சென்னை கடலில் மூழ்கும் அபாயம் !!.. அதிர்ச்சி தகவல்… காலநிலை மாற்ற திட்ட வரை அறிக்கை..!

கடல் மட்டம் உயர்வதால் அடுத்த 100 வருடங்களில் சென்னையில் இருக்கும் மின் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் கடலுக்குள் முழ்கும் என்று சென்னை கால நிலை மாற்ற திட்ட வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை சி40 அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் “நெகிழ் திறனுடன் உந்துதலுடன் சென்னை” என்ற தலைப்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

2050-ஆம் வருடத்திற்குள் கார்பன் சமநிலை என்பதை இலக்காக கொண்டு ஆறு தலைப்புகளில் இந்த செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கடல் மட்டம் உயர்வால் சென்னை நகரம் அதிகம் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது . இதன்படி கடல் மட்டம் அடுத்த ஐந்து வருடங்களில் 7 செ.மீ உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்;- 2100-ஆம் வருடத்தில் 16 சதவீதம் கடலில் முழ்கும். கடல் மட்டம் உயர்வால் 100 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் 17 சதவீத குடிசையில் வாழும் 2.6 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். 2100-ஆம் வருடத்தில் 28 பேருந்து நிறுத்தம், 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் கடலில் முழ்கும் எனவும், மேலும் நான்கு புறநகர் ரயில் நிலையங்கள் கடலில் முழ்கும். இரண்டு மின் நிலையங்கள் கடலில் முழ்கும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Baskar

Next Post

மருமகனை மாமியாரே கொடூரமாக கொலை செய்த பயங்கரம்... மகளின் கள்ள காதலுக்கு தடையாக இருந்ததால்...!

Sat Sep 17 , 2022
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர், சர்க்கார் தோப்பு பகுதியில் வசிக்கும் டிரைவர் அருள்மணி (30). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜோதிலட்சுமி (26) என்பவரை சில வருடங்களுக்கு முன் காதலித்து கல்யாணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நித்ரன் (5), அகிலன் (3)  என்ற இருமகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் ஜோதிலட்சுமி குடும்ப பிரச்னைக் காரணமாக அதே பகுதியில் இருக்கும் அவரது தனது தாய் ஜானகி  வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். […]

You May Like