fbpx

சென்னையில் பரபரப்பு..!! பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்..!! தப்பியோட முயன்றபோது பாய்ந்த தோட்டா..!!

சென்னை பெரம்பூரில் பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஏ பிரிவு ரவுடி அறிவழகன். இவரை, போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். பெரம்பூர் பனந்தோப்பு காலனி அருகே பதுங்கிக் கொண்டிருந்த ரவுடி அறிவழகனை பிடிக்க சென்றபோது, தப்பியோட முயற்சி செய்துள்ளார். அப்போது, திடீரென போலீசார், துப்பாக்கியை எடுத்து அறிவழகனின் காலில் சுட்டனர். இதையடுத்து, அவர் பிடிபட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி தான் அறிவழகன். இவர் வியாசர்பாடியை சேர்ந்த ஏ பிரிவு ரவுடி. அறிவழகன் மீது பல்வேறு வழக்குகளில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், முக்கிய வழக்கு ஒன்றில் ரவுடி அறிவழகனை போலீசார் வலைவீசி தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி..!! பரவி வரும் மர்ம நோய்..!! 10 நாட்களில் 143 பேர் பலி..!! எச்சரிக்கும் WHO..!!

English Summary

The incident of the police shooting a famous rowdy in Perambur, Chennai, has caused a stir.

Chella

Next Post

சென்னையில் இருந்து கொச்சி புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்..!! வானில் வட்டமடித்ததால் பரபரப்பு..!!

Mon Dec 9 , 2024
The flight that took off from Chennai had to make an emergency landing due to an engine failure.

You May Like