fbpx

அடுத்த 4 நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும்…! குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று…!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை முதல் 13-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையில் இருந்து பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

5நாட்களில் 98பேர் மாரடைப்பால் மரணம்..! நடைப்பயிற்சி செல்ல வேண்டாம் -நிபுணர்கள்

Tue Jan 10 , 2023
குளிர் காலத்தில் நடைப்பயிற்சியைத் தவிர்க்க வேண்டுமென இருதயநோய் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும் குளிர்காலத்தில் டீன் ஏஜ் வயதினருக்கும் மாரடைப்பு வர வாய்ப்பு என அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளனர். எல்.பி.எஸ் இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி அளித்துள்ள புள்ளிவிவர அறிக்கையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த 5 நாட்களில் மாரடைப்பு மற்றும் மூளைச்சாவு காரணமாக 98 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 98பேரில் , 44 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர், […]

You May Like