fbpx

மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை…! வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை…!

தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வரும் 21 ஆம் தேதி வரை வீசப்படும் என்பதால் மீனவர்கள கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பெரும் சோகம்.‌‌.. மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பழம்பெரும் நடிகை...! உதவ யாரும் முன் வரவில்லை...!

Sun Sep 18 , 2022
பழம்பெரும் நடிகை சிறுநீரை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சிறந்த நடிப்பால் 80-களின் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஜெயக்குமாரி, பெரும்பாலும் வில்லி மற்றும் கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரிக்கு வயது 70. இவர் தனது மகனுடன் சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். அவர் வசிக்கும் வீடு கூட வாடகை வீடு என்று கூறப்படுகிறது. ஆறு வயது சிறுமியாக இருந்த போது கண்டனா படத்தின் மூலம் திரைக்கு […]

You May Like