fbpx

பயங்கர எச்சரிக்கை.. வரும் 11-ம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை…! வானிலை மையம் கணிப்பு.‌‌…!

தமிழகத்தில் வரும் 11-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வட தமிழ்நாடு பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 11-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இன்று குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழ்நாட்டு கடலோரப்பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு பகுதிகள் கேரள, கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வெந்நீருடன் இதை சேர்த்து சாப்பிட்டால் போதும்.. கடுமையான நோய்கள் கூட குணமாகிவிடும்...

Thu Sep 8 , 2022
வெந்நீருடன் ஒரே ஒரு கிராம்பு சாப்பிட்டால் அது பல்வேறு நோய்களை குனப்படுத்துகிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.. ஆயுர்வேதத்தில் கிராம்புக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட், பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, நச்சுத் தடை பொருள், அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி போன்ற சிறந்த பண்புகளைக் கிராம்பு கொண்டுள்ளது. இது தவிர, கிராம்பில் பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், இரும்பு, மாங்கனீசு, உணவு […]

You May Like