fbpx

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை…! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை…!

தமிழகத்தில் வரும் 20-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 20-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 19, 20 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழ்நாடு கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும்‌ இது கட்டாயம்...! தமிழக அரசு முக்கிய உத்தரவு...!

Sat Sep 17 , 2022
இரண்டாம்‌ பருவத்திற்கான எண்ணும்‌ எழுத்தும்‌ சார்ந்து 1 முதல்‌ 5 வகுப்புகள்‌ கற்பிக்கும்‌ அனைத்து ஆசிரியர்களுக்கும்‌ இரண்டாம்‌ பருவத்திற்கான பயிற்சிகள்‌ 2022-2023-ம்‌ கல்வியாண்டு முதல்‌ தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 3 வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டம்‌ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாநில கல்வியியல்‌ ஆராயச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌ மூலம்‌ முதல்‌ பருவத்திற்கான தமிழ்‌, ஆங்கிலம்‌ மற்றும்‌ கணிதப்‌ பாடத்திற்கு […]

You May Like