fbpx

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வரும் 25-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!

தமிழகத்தில் வரும் 25-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசையில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களிலும், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழககடலோர பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உள்ளங்கை, கால்களில் ஏன் எரிச்சல் உணர்வு ஏற்படுகிறது..? அதற்கு என்ன தீர்வு..?

Thu Sep 22 , 2022
உள்ளங்கை அல்லது உள்ளங்கால்களில் சூடு அல்லது எரிச்சல் போன்ற பிரச்சனையால் நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அல்லது உங்களுக்கு அசௌகரியம், முழங்கால்களுக்கு கீழே உங்கள் கால்களில் வலி மற்றும் இரவில் பிடிப்புகள் உள்ளதா? இந்த மூன்று பிரச்சனைகளில் ஏதேனும் உங்களுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் இதோ… உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் ஏன் எரிகிறது? உள்ளங்கையில் உஷ்ணம் இருப்பவர்களும், உள்ளங்கால்களில் எரிச்சல் உள்ளவர்களும், இருப்பவர்களும் மட்டுமே இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை புரிந்து கொள்ள முடியும். இந்த […]

You May Like