fbpx

#Alert; இன்று இந்த 23 மாவட்டத்தில் உள்ள மக்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்…! வெளுத்து வாங்க போகும் கனமழை…!

தமிழகத்தில் இன்று 23 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 30-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கொலஸ்ட்ரால் அளவை குறைக்க வேண்டுமா..? அப்ப இந்த 4 பானங்களை தினமும் குடித்தால் போதும்..

Tue Sep 27 , 2022
அதிக கொழுப்பு இதய நோய், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் நீரிழிவு போன்ற பல உடல்நல சிக்கல்களுக்கான எச்சரிக்கை அறிகுறியாகும். அதிக கொலஸ்ட்ரால் பல உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, இது கண்டறியப்பட்டவுடன், அதைக் கட்டுப்படுத்த, உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த, உணவில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதிக கொலஸ்ட்ராலை எதிர்த்துப் போராடும் ஒருவர், தாங்கள் உண்ணும் […]

You May Like