fbpx

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.‌‌..! சூறாவளி காற்று வீசும் என வானிலை மையம் தகவல் ‌‌‌‌…!

கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அசத்தல்..‌.! ரூ.6,000 உதவித்தொகை நீங்களும் பெற வேண்டுமா...? 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்....! முழு விவரம்

Sat Dec 17 , 2022
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்களுக்கு, ஆளுநர் தலைமையில் தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மைக்குழுக் கூட்டம் நடந்தது. அதில், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் முன்னாள் படைவீரர் கல்வி மேம்பாட்டு நிதியுதவியை 2022-23ம் கல்வியாண்டு முதல் உயர்த்தி வழங்கிட முடிவு செய்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 1-ம் முதல் […]

You May Like