fbpx

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு…! அடுத்த 4 நாட்களுக்கு மழை…! வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கிழக்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் வரும் 7, 8 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.

Vignesh

Next Post

ஆன்லைன் மூலம் ரூ.8,000 ஆய்வு கட்டணம்‌ செலுத்த வேண்டும்...! இல்லை என்றால் சிக்கல்...! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..‌‌.!

Thu Jan 5 , 2023
2023-2024 ஆம்‌ கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள்‌ துவங்குதல்‌, அங்கீகாரம்‌ புதுப்பித்தல்‌, தொழிற்பள்ளிகளில்‌ புதிய தொழிற்‌ பிரிவுகள்‌ / தொழிற்‌ பிரிவுகளில்‌ கூடுதல்‌ அலகுகள்‌ துவங்குதல்‌ ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள்‌ இணையதளம்‌ மூலமாக வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌. அங்கீகாரம்‌ பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம்‌ சமர்ப்பித்தால்‌ போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள்‌ / கூடுதல்‌ அலகுகளுக்கு தேவையான விவரங்கள்‌ அனைத்தும்‌ ஒரே விண்ணப்பத்தில்‌ மட்டும்‌ விண்ணப்பிக்க […]

You May Like