fbpx

இன்று இந்த 18 மாவட்டத்தில் கனமழை பெய்யும்…! சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவல்…!

தமிழகத்தில் ஒரு மானம் தேதி வரை கனமழைக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

தென்தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இம்மாதம் வெப்பம், மழை எப்படி இருக்கும்? இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்..!

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் வரும் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமல்.. எந்தெந்த சுங்கச்சாவடிகளில் தெரியுமா..?

Thu Sep 1 , 2022
இன்று முதல் சமயபுரம், துவாக்குடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. தமிழகத்தில் நெடுஞ்சாலை பராமரிப்புக்காக வாகன ஓட்டிக்களிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.. ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.. அதன்படி தமிழகத்தில் உளுந்தூர்ப்பேட்டை, திருமாந்துறை, சமயபுரம், துவாக்குடி ஆகிய சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளது… சுங்கச்சாவடி வழியாக ஒருமுறை மட்டுமே பயணிக்கும் 4 சக்கர வாகனங்களுக்கு […]
தீபாவளிக்கு லீவ் எடுத்த ஊழியர்..!! நடவடிக்கை எடுத்த நிர்வாகம்..!! தீக்குளித்து தற்கொலை செய்த சோகம்..!!

You May Like