fbpx

தீபாவளி அன்று கனமழை பெய்ய வாய்ப்பு…! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!

தமிழகத்தில் வரும் 24-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். பிறகு வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக 24-ம் தேதிவாக்கில் வலுபெறக்கூடும். பிறகு 25-ம் தேதிவாக்கில் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 24-ம் தேதி ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Vignesh

Next Post

செம சான்ஸ்... திங்கள் முதல் வெள்ளி வரை பயிற்சி...! உடனே இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்...!

Sat Oct 22 , 2022
தென்னை வளர்ச்சி வாரியம், கேரள மாநிலம் அலுவாவில் உள்ள வாழக்குளத்தில் அமைந்துள்ள அதன் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒருநாள் பயிற்சி முதல் நான்கு நாள் பயிற்சி திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. தேங்காய் சிப்ஸ், பிஸ்கெட்டுகள், சாக்லெட், சட்னி பவுடர், தேங்காய் பர்ஃபி, ஊறுகாய், ஜாம் போன்ற பொருட்களை தயாரிக்க இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. வினிகர் மற்றும் நாடா டி கோகோ தயாரிக்கும் ஒருநாள் பயிற்சியும் வழங்கப்படுகிறது. சுவையூட்டப்பட்ட தேங்காய்ப் பால், வேர்களின் […]

You May Like