fbpx

#Rain: வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இந்த மாவட்டத்தில் மட்டும்.‌‌..! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு…!

தமிழகத்தில் வரும் 24-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதே போல நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரியில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இன்று முதல் 24-ம் தேதி வரை லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மாஸ் பிளான் போட்ட செந்தில் பாலாஜி... 50,000 பேர் கொத்தாக திமுக-வில் இணைய ஏற்பாடு...! கோவை செல்லும் முதல்வர்...!

Sun Aug 21 , 2022
24 ஆம் தேதி பொள்ளாச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 50000 பேர் திமுகவில் இணை உள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், முடிவு பெற்ற பணிகளைத் தொடங்கி வைக்க கோவைக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் 23-ம் தேதி செல்கிறார்.23-ம் தேதி கோவையில் இரவு தங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் 24-ம் தேதி காலை கோவையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்குப் பல்வேறு […]
ட்விட்டரில் டிரெண்டான திமுக எம்.எல்.ஏ.! #ஐந்து_கட்சி_அமாவாசை என்ற ஹேஷ்டேக்குடன் உலா வரும் ட்வீட்கள்..!

You May Like