fbpx

சென்னை மக்களே..!! அடுத்த ரவுண்டுக்கு ரெடியா..!! வெளுத்து வாங்கப் போகும் மழை..!! மாலை கடையை மூடிவிடலாம்..!! பிரதீப் ஜான் பதிவு..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்திருந்த நிலையில், அதன்படியே நேற்று மாலை முதலே சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மேகங்கள் சூழ்ந்தன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், சேலம், தஞ்சை, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது சென்னையில் கனமழை பெய்து வருவதாகவும், இந்த மழை விட்ட பிறகு மீண்டும் ஒருமுறை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ”சென்னையில் அடுத்த ரவுண்டு மழை தொடங்கியுள்ளது. தற்போது பெய்யும் மழை குறுகிய நேரம் கொண்டதாகவும், தீவிர மழையாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த மழை விட்ட பிறகு மீண்டும் ஒருமுறை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாலை வேளைக்கு பிறகு நாம் கடையை இழுத்து மூடிவிடலாம்” (மழைக்கு வாய்ப்பு இல்லை என்பதாக சூசகமாக குறிப்பிட்டுள்ளார்) என்று தெரிவித்துள்ளார்.

Read More : ”நாங்க CBI-ல இருந்து பேசுறோம்”..!! உஷாரய்யா உஷார்..!! இந்த நம்பரில் இருந்து ஃபோன் கால் வந்தா எடுக்காதீங்க..!!

English Summary

The next round of rain has begun in Chennai. The current rains are expected to be short-lived and intense.

Chella

Next Post

அதிகனமழை எச்சரிக்கை.. தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை..!! - மாவட்ட ஆட்சியர்

Thu Dec 12 , 2024
Heavy rain warning.. Half day holiday for Tenkasi district schools..!! - District Collector

You May Like