சென்னை ஆழ்வார்பேட்டையில் கேளிக்கை விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள மதுபான கேளிக்கை விடுதியில் நேற்று இரவு முதல் தளத்தில் உள்ள அறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சைதாப்பேட்டை, எழும்பூர், அசோக்நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 3 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், இடிபாடுகளை அகற்றும் வல்லுநர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். தீயணைப்பு படையினருடன் இணைந்து அவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 3 பேர், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னை கேளிக்கை விடுதி விபத்திற்கு மெட்ரோ பணிகள காரணம் இல்லை- CMRL விளக்கம் அளித்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 240 அடி தூரத்தில் தான் கட்டுமான பணிகள் நடந்து வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.