தமிழ்நாடு முழுக்க நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதலே மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
அதன்படி சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சில பகுதிகளில் நீர் தேங்கி இருக்கிறது மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டிருப்பதால் பல்வேறு பகுதிகளில் நீர் தேக்கம் என்பது காணப்படாமல் மெட்ரோபனைகள் நடைபெறும் ஒரு சில பகுதிகளிலும் தாழ்வான இடங்களிலும் நீர் தேங்கியுள்ளனர்.
அதோடு மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் குடிநீர் வழங்கல் கழிவுநீர் அகற்றம் குறித்த புகார்களை தெரிவிக்க மாநகராட்சி நிர்வாகம் தனி எண்களை அறிவித்திருக்கிறது.
அதன்படி மழை நீர் பாதிப்புகளுக்கு 1913 மற்றும் மழை நீரை அகற்றுவதற்கு 044-45674567 என்ற எண்ணிடம் அழைக்கலாம் இன்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது அதேபோல குடிநீர் வாரியத்தை தொடர்பு கொள்ள 1916 என்ற எண்களில் அழைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.