fbpx

Chennai | ஓடும் ரயிலில் இளம்பெண் பலாத்காரம்..!! தகவல் தெரிவிப்போருக்கு சன்மானம் அறிவிப்பு..!!

ஆகஸ்ட் 25ஆம் தேதி திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலில் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ளார். ரயில் காட்பாடியை அடைந்தபோது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். இருப்பினும், அவர் போலீசில் புகார் ஏதும் அளிக்கவில்லை. ரயில் சென்னையை அடைந்ததும் எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் தனக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், உடனே ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்த ரயிலில் பயணித்தவர்கள் பற்றிய விவரத்தை சேகரித்த காவல்துறை, சந்தேகப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்த நபர் குறித்த தகவலை தெரிவிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி, இச்சம்பவம் தீயாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ரயிலில் இளம் பெண்ணுக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கும் வகையில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Read More : மலையாளத்தை போல தமிழ் திரையுலகிலும் அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கு..!! தெலுங்கில் உச்சம்..!! இப்படித்தான் கேட்பாங்க..!!

English Summary

Teen raped on moving train..!! Reward announcement for informers

Chella

Next Post

இன்று முதல் 5 நாட்கள் பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான ஆன்லைன் போர்டல் மூடல்..!! - அரசு அறிவிப்பு

Thu Aug 29 , 2024
Online Passport Portal Shut For 5 Days, All Appointments To Be Rescheduled

You May Like