fbpx

சென்னை: கலைகளின் “திருவிழா” இளைஞர்களின் கைவண்ணத்தில்..! கவனம் ஈர்த்த ‘பித்தா’ குழுவின் படைப்புகள்.!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ‘திருவிழா சென்னை’ என்ற பெயரில் கலை கண்காட்சி நடைபெற்று வருகிறது. லாப நோக்கமில்லாமல் கலையை பிரதானப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு நடைபெறும் இந்த கண்காட்சி சென்னை மனம் மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.

ஜனவரி 28ஆம் தேதி துவங்கிய இந்த கண்காட்சி பிப்ரவரி 2-ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. இளம் தலைமுறையினர் பலரும் தங்களது கலை படைப்புகளை காட்சிப்படுத்தும் விதமாக பல்வேறு வேலைப்பாடுகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்று இருக்கிறது. இந்த கண்காட்சியில் ‘பித்தா’ என்ற பெயரில் இடம் பெற்றிருந்த சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் போன்ற கலை படைப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

பெட்டிக் கடையில் பலதரப்பட்ட பொருட்களால் சூழப்பட்ட பாட்டி, ஆரோவில்லில் உள்ள பறவைகள் மற்றும் தாவரங்கள் மற்றும் வீரப்பனின் ஓவியம் போன்ற  30-க்கும்  மேற்பட்ட கலை படைப்புகள் இந்த திருவிழாவில் இடம் பெற்றிருந்தன. இந்தப் 12 கலைஞர்களின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் போன்ற கலை படைப்புகளின் கருப்பொருளாக இருப்பது  ‘பித்தா’ .

‘ஆசிஃப் ஃபிர்தௌஸ்’ என்ற 23 வயது சிற்பக் கலைஞருடன் 12 இளைஞர்களும், இளம்பெண்களும் சேர்ந்து உருவாக்கி இருக்கும் இந்த கலை படைப்புகள் காண்போரின் மனதை கவரும் வகையில் அமைந்திருக்கிறது. இவர்களது அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் அதன் பெயருக்கு ஏற்றார் போலவே கலையின் மேல் பித்து பிடிக்க வைப்பது போல மிகவும் தத்ரூபமாகவும் உணர்வுபூர்வமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது

பண்டைய தமிழ் இலக்கியங்களில் ‘பித்தா’ என்ற சொல் பக்தியின் போதையில் இருப்பவர்களை குறிக்கும் அல்லது ஒரு பொருளின் மேல் அதீத காதல் கொண்டவர்களை குறிக்கும். இந்த சொல்லிற்கு ஏற்றார் போல இவர்களது கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஓவியங்கள் சிற்பங்கள் போன்ற கலை படைப்புகள் கலையின் மேல் இந்த இளைஞர்கள் கொண்ட அதீத காதலையும் அவர்களுக்கு கலையின் மேல் இருக்கும் போதையையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இவர்களது கலை படைப்புகள் சமூகத்தை நோக்கி கேள்வியை கேட்பதாக அமைந்திருக்கிறது.

இதுபோன்ற கலைத் திருவிழா ஆசிஃப் ஃபிர்தௌஸ் சிற்பக் கலைஞர்களுக்கும் தங்களது திறமையையும் சமூகத்தின் மீதான பார்வையையும் முதல்முறையாக காட்சிப்படுத்துவதற்குரிய வாய்ப்பை வழங்கி இருக்கிறது. அவரது சிற்பங்கள் சுயத்தைப் பற்றிய கேள்விகளை முன் வைப்பதாக கலைநயத்துடன் அமைந்திருக்கிறது. மேலும் அவருடன் இணைந்து கலைப்படைப்புகளை உருவாக்கிய மற்ற கலைஞர்கள் பூர்வி, மீனாட்சி அய்யப்பன், சசிதர், சாய்ரா, ப்ரீத்தி ஆகியோரின் படைப்புகளும் சமூகத்தின் பார்வையை கேள்வி கேட்பதாக அமைந்திருக்கிறது. மேலும் இந்த கண்காட்சியின் மூலம் கிடைக்க பெறும் நிதியை எண்ணூர் விஷவாயு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க இருப்பதாகவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Post

ரேஷன் கடை அலர்ட்!… எடை குறைவாக பொருட்களை அனுப்பினால் பணி நீக்கம்!

Wed Jan 31 , 2024
ரேஷன் கடைக்கு எடை குறைவாக மூட்டைகள் வந்தால், அதை பிரிக்காமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஊழியர்கள் புகார் அளிக்கலாம். எடை குறைவுக்கு காரணமான நபர்கள் மீது, பணிநீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றை, நுகர்பொருள் வாணிபக் கழகம், ரேஷன் […]

You May Like