fbpx

சென்னை சுற்றுலா பேருந்து விபத்து!… 8 பேர் பலி!… ஆந்திராவில் சோகம்!

சென்னையில் இருந்து சென்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்றுகொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. சனிக்கிழமை அதிகாலை நெல்லூர் அருகே உள்ள காவலி பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த 18 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லாரி ஓட்டுநர் மற்றொரு லாரி மீது மோதாமல் இருப்பதற்காக விலகிச் செல்ல முயன்றபோது எதிரே வந்த சுற்றுலாப் பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Kokila

Next Post

அதிகளவில் கர்ப்பம்..!! பெண் கைதிகளின் சிறைச்சாலைக்குள் ஆண் கைதிகள் நுழைய தடை..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Sat Feb 10 , 2024
மேற்குவங்க மாநில சிறைச் சாலைகளில் பெண் கைதிகள் அதிகளவில் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 196 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைகள் என்பது சீர்திருத்தத்திற்கானவைதான். ஆனால், சிறைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் குறித்து சமூக சேவகர் அமிக்ஸ் க்யூரி’ கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். […]

You May Like