fbpx

செஸ் ஒலிம்பியாட் போட்டி..! 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் அனுமதி..!

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலைநிகழ்வில் கலந்துகொள்ளவிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களுக்கு கொரோனா மற்றும் குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி..! 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் அனுமதி..!

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொள்ளவிருந்த 900 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 4 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Chella

Next Post

’அமெரிக்காவுடனான ராணுவ மோதலுக்கு வடகொரியா எப்போதும் தயார்’..! - அதிபர் கிம் ஜாங் உன் ஆவேசம்

Thu Jul 28 , 2022
அணு ஆயுதப்போரை தடுக்க வடகொரியா தயாராக இருப்பதாகவும், அமெரிக்காவுடனான எந்தவிதமான ராணுவ மோதலுக்கும் நாடு தயாராக இருப்பதாகவும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியாவில், கொரியப் போர் நிறுத்தத்தின் நினைவு தினமான நேற்று (ஜூலை 27) அதன் 69-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அதிபர் கிம் ஜாங் உன், வடகொரியா மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகளைத் தாக்கி பேசியபோது, “போருக்குப் […]
’அமெரிக்காவுடனான ராணுவ மோதலுக்கு வடகொரியா எப்போதும் தயார்’..! - அதிபர் கிம் ஜாங் உன் ஆவேசம்

You May Like