fbpx

செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி..! பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டமைக்கும், இவ்விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்தமைக்கும் தனது நன்றியை பிரதமருக்கு தெரிவித்துள்ளார். இந்தியாவில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் பிரதமர் காட்டிவரும் ஆர்வத்தை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதுவதற்குரிய ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி..! பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

தமிழக அரசின் வேண்டுகோளையேற்று, 2024 ஜனவரியில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு, 6.5.2022 அன்று தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இவ்விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான உத்தரவாதங்களை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு இதுதொடர்பாக 23.5.2022 அன்று கடிதம் எழுதியுள்ளதாகவும், செப்டம்பர் 2022 இறுதிக்குள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்த உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Chella

Next Post

பழிக்கு பழி சரமாரியாக வெட்டி... ரவுடி கொலை; போலீசார் விசாரணை...!

Fri Jul 29 , 2022
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அருகே மஞ்சங்குளத்தில் குடியிருக்கும் சுந்தரபாண்டியன் மகன் சாமிதுரை(25). இவர் அவர்களின் சொந்த விவசாய நிலத்தில் விவசாய வேலைகளை செய்து வந்ததுள்ளார். இந்நிலையில் இவர் மீது அடிதடி, வழிப்பறி, கொலை என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அந்த பகுதியில் ரவுடியாக இருந்துள்ளார். தொடர்ந்து பல்வேறு அடிதடி வழக்குகளில் சிக்கியதால் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் . இதற்கிடையில், கடந்த […]

You May Like