fbpx

செஸ் உலகக்கோப்பை!… பைனலுக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா!… 20 ஆண்டுகளுக்கு பின் தமிழக வீரராக புதிய வரலாறு!

நடப்பு உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் சென்னையை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா. முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் இறுதிப் போட்டியில் அவர் விளையாட உள்ளார்.

உலகக் கோப்பை செஸ் தொடரின் 10வது சீசன்அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 10 வீரர்கள், 7 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதன் அரை இறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவுடன் மோதினார். முன்னதாக இருவரும் விளையாடிய இரண்டு ஆட்டமும் டிராவில் முடிந்தது. அதனால் டை பிரேக்கர் மூலம் வெற்றியாளரை உறுதி செய்யும் ஆட்டம் நடத்தப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-5,2-5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா விளையாட உள்ளார். இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்திற்கு பின் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு தமிழரான பிரக்ஞானந்தா செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் செஸ் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மிகவும் இளவயது வீரர் என்ற வரலாற்று சாதனையையும் பிரக்ஞானந்தா படைத்துள்ளார். இதற்கு முன் 2005ஆம் ஆண்டு 22 வயதில் பொனோமரியோவ் இறுதிப்போட்டியில் ஆடியதே சாதனையாக இருந்தது. ஆனால் பிரக்ஞானந்தா 18 வயதிலேயே செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.

Kokila

Next Post

#சற்றுமுன்: சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் நாள் தள்ளிப்போக வாய்ப்பு...!

Tue Aug 22 , 2023
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தரையிறங்க சாதகமான சூழல் இல்லாத காரணத்தால் ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக இஸ்ரோவின் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார் சந்திரயான்-3 விண்கலம் கடந்த 18-ம் தேதி அதன் சுற்றுப்பாதை தூரம் குறைக்கப்பட்டது. தற்போது நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 24 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்று வட்டப்பாதைக்கு லேண்டர் நேற்று முன்தினம் […]

You May Like