சத்தீஸ்கரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியயை பழிவாங்கும் நோக்கில் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 5 பேர், பள்ளியின் கழிப்பறையில் வெடிகுண்டு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில், 8 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள் தங்களின் வகுப்பு ஆசிரியை பழிவாங்க எண்ணினர். சோடியம் உடன் தண்ணீர் கலந்தால் வெடிக்கும் என்பதை இணையத்தில் பார்த்த மாணவர்கள் அந்த முறையை பயன்படுத்தி ஆசிரியயை பழிவாங்க திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, ஆன்லைனில் சோடியம் வாங்கியுள்ளார்.
தண்ணீர் பட்டதும் வெடிக்கும் வகையில் மாணவர்கள் கழிவறையில் சோடியமை வைத்து ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஆசிரியை பழி வாங்க மாணவர்கள் செய்த சதி திட்டத்தில் 9 வயது சிறுமி சிக்கியுள்ளார். வெடி சத்தத்தையும் சிறுமியின் அலறல் சத்தத்தையும் கேட்ட பள்ளி ஊழியர்கள் கதவை உடைத்து சிறுமியை மீட்டனர். சிறுமியின் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளியின் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக 4 மாணவர்களை கைது செய்து சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ள மற்றொரு மாணவரை விரைவில் கைது செய்ய உள்ளதாகவும் இந்த வழக்கை விசாரித்து வரும் மாவட்ட எஸ்.பி கூறியுள்ளார்.
Read more:நாளை விசாரணைக்கு ஆஜராக முடியாது.. காவல்துறை செய்தது கேவலமான நடவடிக்கை.. சீமான் பேட்டி..