மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயோதிகம் காரணமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தயாளு அம்மாள் இல்லத்தில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அவர் வீட்டில் இருந்தாலும் செவிலியர்கள் கண்காணிப்பில் அடிக்கடி மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். கடந்த மார்ச் மாதம் அவருக்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.
இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வழக்கமான பரிசோதனைதான் என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் பரிசோதனையில் இருந்த தயாளு அம்மாள் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோபாலபுரம் இல்லத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியும், அவரது மனைவி தயாளு அம்மாளும் வசித்து வந்தனர். அவருக்கு பின்னர் அந்த இல்லத்தில் அவர் மட்டுமே சில உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வசித்து வருகின்றார்.
கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள், நினைவு நாள் போன்ற நாட்களில் மட்டும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருடன் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று தயாளு அம்மாளிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு வருவார்கள். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இறந்தபோது கூட உடல் நலம் பாதிக்க்பட்டு இருந்தார்.