fbpx

இனி தப்பிக்கவே முடியாது..!! 2026இல் 200 தொகுதி..!! செம டோஸ் விட்ட CM ஸ்டாலின்..!!

திமுக தலைவரும், முதலமைச்சருமான முக.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

மேலும், திமுகவை சேர்ந்த சில மாவட்ட செயலாளர்கள் மீது புகார்கள் வந்துள்ளன. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். மக்களுக்கு நலத்திட்டங்களை அளித்திருக்கிறோம், அதை வாக்குகளாக மாற்ற களப்பணியாற்ற வேண்டும். சுணக்கமின்றி தொடர்ந்து செயல்பட்டால், அடுத்த முறையில் திமுக ஆட்சி தான் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் சூளுரைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றாலும், கட்சியையும், அரசையும் கவனித்துக் கொண்டு தான் இருப்பேன். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என்றும் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Read More : என்ன விஜய் இதெல்லாம்..? மாநாட்டிற்காக இப்படியா செய்வது..? தவெக-வை வெளுத்து வாங்கிய சீமான்..!!

English Summary

Chief Minister Stalin has warned that complaints against district secretaries and administrators will be investigated and action will be taken.

Chella

Next Post

இந்தியாவின் மிக நீளமான ரயில் நிலையம்!. கின்னஸ் சாதனை படைத்து அசத்தல்!

Sat Aug 17 , 2024
This is India's Longest Railway Station, Holds Guinness World Record

You May Like