fbpx

பட்டு, வேஷ்டி சட்டையில் வந்த முதலமைச்சர் ஸ்டாலின்.. கலை நிகழ்ச்சிகள் கோலாகலம்..

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா சென்னை நேரு விளையாட்டரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த செஸ் ஒலிம்பியாட்டில் 186 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.. இந்த வீரர், வீராங்கனைகள் 87 பேருந்துகள் மூலம் மாமல்லபுரத்தில் இருந்து நேரு விளையாட்டரங்கம் அழைத்து வரப்பட்டனர்.. இந்த விழாவை முன்னிட்டு நேரு விளையாட்டரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.. விழா அரங்கில் சதுரங்க காய்களை கொண்டு ஒலிம்பியாட் துவக்க விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது.. விஐபிக்கள், பார்வையாளர்கள் அமர சிறப்பு கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன.. இந்த விழாவில் கண்ணை கவரும் மணல் ஓவியங்களை வரைந்து ஓவியம் சர்வம் படேல் சாகசம் புரிந்தார்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பட்டு, வேஷ்டி சட்டை அணிந்து வருகை புரிந்துள்ளார்.. நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வைரமுத்து, கார்த்தி, உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்..

இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி 5.10 மணியளவில் சென்னை வந்தார்.. இன்னும் சற்று நேரத்தில் அவர் விழா அரங்கிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொள்ளும் நாடுகளின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.. தங்கள் நாட்டு கொடிகளை ஏந்தி செல்லும் வீரர்களை அரசு பள்ளி மாணவர்கள் வழிநடத்தி சென்றனர்.. இதை தொடர்ந்து இந்தியாவின் பன்முகத் திறனை, கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் அந்தந்த மாநிலங்களில் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன..

Maha

Next Post

அமைச்சர் பதவியில் இருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கம்..! மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!

Thu Jul 28 , 2022
மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் வர்த்தகம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் ஆகிய துறைகளுக்கான அமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர், கடந்த 2016 முதல் 2021 வரை அம்மாநில உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். அப்போது, அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் ஊழல் நடைபெற்றதாக புகார் […]
அமைச்சர் பதவியில் இருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கம்..! மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!

You May Like