fbpx

கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்..!! வைரல் வீடியோ..!!

கொடைக்கானலுக்கு ஓய்வுக்காக சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள கோல்ஃப் மைதானத்தில் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்தார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நிறைவடைந்தது. தேர்தலையொட்டி, கடந்த ஒரு மாதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொளுத்தும் வெயிலிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், தேர்தல் முடிந்ததும் ஓய்வுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு 5 நாள் பயணமாக சென்றுள்ளார்.

கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கியுள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கோல்ஃப் மைதானத்துக்கு சென்று கோல்ஃப் விளையாடி மகிழ்ந்தார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளன. தொடர்ந்து பல்வேறு சுற்றுலா தலங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்ல உள்ளதால், கொடைக்கானலில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read More : சென்னையில் களைகட்டும் பூனை பிரியாணி..!! இரவில் நடக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

Chella

Next Post

ஏப்ரல் 2024 இல் மொத்த ஜிஎஸ்டி வசூல், 2 கோடியை தாண்டியது ; வரலாறு காணாத சாதனை!

Wed May 1 , 2024
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையில் இல்லாத அளவுக்குக் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச வரி வசூல் ஆகியுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரி வசூல் (சரக்கு மற்றும் சேவை வரி) ஏப்ரல் மாதத்தில் ரூ. 2.1 லட்சம் கோடியை தொட்டுள்ளது. இது 2017 ஆம் ஆண்டு வரி விதிப்புக்குப் பிறகு இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர எண்ணிக்கை என்று மத்திய நிதி […]
கடந்த ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.43 லட்சம் கோடி..! மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு..!

You May Like