fbpx

அடிதூள்; தமிழகத்தில் இன்று முதல் மாணவர்களுக்கு… முதலமைச்சர் தொடங்கி வைக்க போகும் அசத்தல் திட்டம்…!

தமிழகத்தில் இன்று காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும், ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் முதலமைச்சர் ஸ்டாலினால், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் மதுரையில் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது.

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு அரசாணையில் உரிய ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அடேங்கப்பா... சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம்...! தமிழக அரசு அரசாணை...

Thu Sep 15 , 2022
ஆதிதிராவிடர் தொழில் முனைவோருக்கு சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படும். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் 2022-2023-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு தமிழ்நாடு சிமெண்ட் […]

You May Like