கன்னியாகுமரியில் திருவள்ளூர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து வெள்ளி விழா நிகழ்ச்சிகள் இன்றும் நாளையும், தமிழக அரசின் சார்பில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படுகின்றன. இந்த விழாவிற்காக தனி படகு மூலம் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் திருவள்ளூர் சிலைக்கு வந்தனர். பிறகு அனைவரும் திருவள்ளூர் சிலை முன்பு புகைப்படம் எடுத்தனர்.
இதனையடுத்து திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கடல்சார் கண்ணாடி இழை கூண்டு பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பிறகு அந்த பாலத்தை திறந்து வைத்து அதன் மீது நடந்து சென்றார். இதற்கு பிறகு நகு பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலும் புத்தக கண்காட்சியும், புகைப்பட கண்காட்சியும் முதலவர் திறந்து வைக்க உள்ளார்.
கன்னியாகுமரியின் முதன்மையான பொழுதுபோக்கு மாசம் என்று சொன்னால் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளூர் சிலையும், விவேகானந்தர் பாறையும் என்றே கூறலாம். ஆனால் அடிக்கடி கடல்நீர்மட்டம் உயர்வு மற்றும் தாழ்வு, கடல் சீற்றம், வானிலை மாற்றம் போன்றவற்றால் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.
விவேகானந்தர் பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவருமே, வானிலை காரணமாக செல்லமுடியாத சூழ்நிலையில், நடந்தே திருவள்ளுவர் சிலைக்கும் சென்று வரும் வகையில் ரூ.37 கோடி செலவில் கடல்சார் கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் மூலம் படகு சேவை எப்போதெல்லாம் இயக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் நடந்தே சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிடலாம்.
Read More: பரபரப்பு.. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதிரடி கைது..!! என்ன விவகாரம்..?