fbpx

அண்ணாமலையிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்..!! திருமாவை இப்படி சொல்லிட்டாரே..!!

தலித் தலைவர்கள் முதலமைச்சராக முடியாது என திருமாவளவன் கூறிய கருத்துக்கு அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சென்னையில் நடைபெறும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க உள்ளேன். இந்த விழாவை பாஜக அரசியல் நிகழ்வாக பார்க்கவில்லை. நாணய விழா தொடர்பாக முதலமைச்சர் தொலைபேசியில் என்னை அழைத்தார்.

திமுக நிர்வாகி பாஜக அலுவலகம் வந்து அழைப்பிதழ் வைத்தார். கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைத்தே ஆக வேண்டும். கருணாநிதியின் 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுவது தமிழ்நாட்டுக்கு பெருமை. கட்சி ரீதியாக மாறுபாடுகள் இருந்தாலும், அரசியல் நாகரீகத்துடன் பாஜக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறது.

குற்றங்களில் ஈடுபடுபவர்கள் திமுக-வைச் சேர்ந்தவர்கள் என்பதால், காவல்துறை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. தமிழ்நாட்டில் தலித் தலைவர்கள் முதலமைச்சராக வருவதற்கான சூழல் இருக்கிறது. இது கக்கன் ஐயா வாழ்ந்த பூமி. நல்லவர்களுக்கு இங்கே இடம் கிடைக்கும். திருமாவளவன் திமுகவிடமிருந்து கூடுதல் சீட் பெற வேண்டும் என்பதற்காக இப்படி பேசியுள்ளார்” என்று விமர்சித்தார்.

Read More : செம குஷி..!! இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை..!! சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்..!! திக்குமுக்காடும் சென்னை..!!

English Summary

Annamalai rejected Thirumavalavan’s statement that Dalit leaders cannot become Chief Minister.

Chella

Next Post

11வது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி!. மலர் மழை பொழிந்த ஹெலிகாப்டர்கள்!

Thu Aug 15 , 2024
Prime Minister Modi hoisted the national flag for the 11th time! Helicopters showered with flowers!

You May Like