fbpx

”வாழ்த்து சொல்வதில் பாகுபாடு பார்க்கும் முதலமைச்சர்”..! மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு முதலமைச்சர் பாகுபாடின்றி வாழ்த்து சொல்ல வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மக்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல விநாயகக் கடவுள், அனைவருக்கும் நல் ஆயுள், ஆசியைத் தர வேண்டும், அனைவருக்கான வளர்ச்சியைத் தர வேண்டும் என்று கூறினார். அனைவரும் இணைந்து 2047ஆம் ஆண்டுக்குள் தேசம் தழுவிய வளர்ச்சியை எட்டுவோம் என்று தெரிவித்தார்.

”வாழ்த்து சொல்வதில் பாகுபாடு பார்க்கும் முதலமைச்சர்”..! மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

விநாயகர் சதுர்த்தி அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகையாக உள்ளது. பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் திருவிழாக்களுக்கு வாழ்த்து சொல்வது அனைவரின் கடமை. திமுக தலைவராக இருக்கும்போது வாழ்த்து சொல்லாவிட்டால், பரவாயில்லை. ஆனால், முதலமைச்சராக இருந்துகொண்டு வாழ்த்து சொல்லாமல் இருப்பது தவறு என்று குறிப்பிட்டார். விநாயகர் சதுர்த்தியை ஸ்டாலின் கொண்டாடவிட்டாலும் பரவாயில்லை, வாழ்த்துகளை தெரிவித்திருக்க வேண்டும். முதலமைச்சர் பாகுபாடின்றி வாழ்த்து சொல்ல வேண்டும். முதலமைச்சராக இருப்பவர், பிற சமுதாய விழாக்களுக்கு செல்கையில், பெரும்பான்மை மக்களின் விழாக்களுக்கும் தாமாக முன்வந்து வாழ்த்து சொல்ல வேண்டும்.

”வாழ்த்து சொல்வதில் பாகுபாடு பார்க்கும் முதலமைச்சர்”..! மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு மிகவும் சீரழிந்துவிட்டது. யாரும் பாதுகாப்பாக நடமாட முடியவில்லை. காவலர்கள் மீதே தாக்குதல் நடைபெறும் போது சாமானிய மக்களின் நிலை என்ன என்பது கவலைக்குரியதாக உள்ளது. சட்டம் – ஒழுங்கை கவனமாக கையாள வேண்டும். அதில், மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும். உள்கட்டமைப்பு திட்டங்கள் நாட்டுக்கு தேவை. சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் அரசியல் செய்யக்கூடாது”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

புரட்டி போட்ட கனமழை.. கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..

Wed Aug 31 , 2022
கேரளா மற்றும் கர்நாடகாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.. நாடு முழுவது பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல பகுதிகள் தொடர் கனமழை பெய்து வருகிறது.. அந்த வகையில் கேரளாவில் கடந்த சில தினங்களாக பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 9 அணைகளுக்கு […]

You May Like