fbpx

முதல்வரின் அதிரடி உத்தரவு..!! இனி இந்த உணவுகளை விற்கவே கூடாது..!! மீறினால் கடும் நடவடிக்கை..!!

மத்தியப்பிரதேசத்தில் திறந்தவெளிகளில் முட்டை மற்றும் இறைச்சி ஆகியவற்றை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய முதல்வராக மோகன் யாதவ் பதவியேற்ற சூட்டில் அதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மோதிலால் நேரு ஸ்டேடியத்தில், புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் நேற்று பதவியேற்றார். துணை முதல்வர்களாக ஜெகதீஷ் தேவ்தா மற்றும் ராஜேந்திர சுக்லா ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். மபி புதிய முதல்வர் மோகன் யாதவ் ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வந்தவர். அதனடிப்படையில், அவரது தீவிரமான செயல்பாடுகள் அமையும் என கணிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப, பதவிப் பிரமாணம் முடிந்த வேகத்தில் புதிய உத்தரவுகள் பலவற்றை பிறப்பித்துள்ளார். அவற்றில் ஒன்றாக திறந்த வெளியில் இறைச்சி, முட்டைகளை விற்க தடை விதித்துள்ளார்.

இதன் பொருட்டு டிசம்பர் 15 முதல் 31 வரை, திறந்த வெளியில் இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்கான தடையை அமல்படுத்துவது தொடர்பாக உணவுத் துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகளால் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரமும், விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. பின்னர், புத்தாண்டு முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

Chella

Next Post

இன்னைக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை..!! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? லிஸ்ட் இதோ..!!

Thu Dec 14 , 2023
தமிழ்நாட்டில் இன்று டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை இன்றைய தினத்தில் இருந்து தென் மாவட்டங்களில் தீவிரம் அடைய வாய்ப்புகள் உள்ளன. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. […]

You May Like