fbpx

குழந்தைகளுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்..!! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!!

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “தமிழ்நாடு தேசிய ஆசிரியர்‌ நல நிதியில் இருந்து தொழிற்கல்வி பயிலும்‌ ஆசிரியர்களின்‌ பிள்ளைகளுக்கு 2022 – 2023ஆம்‌ கல்வி ஆண்டிற்கு படிப்புதவித்‌ தொகை வழங்க விண்ணப்பங்கள்‌ பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்தத் தகவலை அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும்‌ தங்கள்‌ ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளுக்கும்‌ உடனடியாக சுற்றறிக்கை மூலம்‌ அறிவித்து படிப்பு உதவித்‌ தொகை பெற விரும்பும்‌ ஆசிரியர்கள்‌ 31.12.2022-க்குள்‌, ஆணையர்‌, பள்ளிக்கல்வி, டி.பி.ஐ வளாகம்‌, கல்லூரிச்‌ சாலை, சென்னை-06 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

குழந்தைகளுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்..!! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!!

இந்த கல்வி உதவித்தொகை கோரும் ஆசிரியர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் பணிக்காலம் முடிந்திருக்க வேண்டும். ஆசிரியர்களின் குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனத்தில் தொழில் படிப்புகளை படிப்பவராக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் ஆண்டு வருமானம் 7.2 லட்சத்துக்குள் இருப்பதோடு, தங்களுடைய பணி மற்றும் ஊதிய விவரங்களையும் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற மற்றும் இறந்து போன ஆசிரியர்களின் பிள்ளைகளும் இந்த உதவி தேவை பெற விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

நெருங்கும் புயல்..!! அதிகனமழை எச்சரிக்கை..!! 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?

Mon Dec 5 , 2022
டிசம்பர் 8ஆம் தேதி 13 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ”வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று தென் மேற்கு வங்கக்கடல் நோக்கி நகரும். டிச.8ம் […]

You May Like