கேரள மாநிலம், கொச்சி அய்யம்புழா பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான தனேஷ். டாக்ஸி டிரைவராக பணியாற்றி வரும் இவருக்கும், குறுப்பம்படி பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கணவரை, தனேஷ் தனது டாக்ஸியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார்.
இதனிடையே, இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, அந்தப் பெண்ணின் கணவன் இறந்துவிட்டார். இதனால், தனது 2 மகள்களுடன் வசித்து வந்த அந்த பெண், தனேஷுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில், தனது கள்ளக்காதலியான அந்த பெண்ணின் 10 மற்றும் 12 வயது மகள்கள் மீது தனேஷுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது.
இதனால், அவர் அந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், 12-வயது சிறுமியின் ஃபேஸ்புக் அக்கவுன்டில் இருந்த அவரது தோழிகளின் புகைப்படங்களை காண்பித்து, அவர்களை வீட்டுக்கு அழைத்துவரும்படி கூறி தனேஷ் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி, தனேஷ் கூறியதை செய்ய முடிவு செய்துள்ளார். அதன் படி, தனேஷ் அழைத்து வரச் சொன்ன மாணவி ஒருவரிடம், ‘எனது அப்பா உன்னை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார்’ என கடிதம் எழுதி கொடுத்துள்ளார்.
கடிதத்தை பெற்றுக்கொண்ட அந்த மாணவி, அந்த கடிதத்தை வீட்டுக்கு கொண்டு சென்று தனது அம்மாவிடம் காட்டியுள்ளார். அந்த மாணவியின் அம்மா அதே பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய், அந்த கடிதத்தை போலீஸில் ஒப்படைத்தார். இதையடுத்து, போலீஸார் 10 மற்றும் 12 வயது உள்ள சிறுமிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், அந்த சிறுமிகளுக்கு டாக்ஸி டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், டாக்ஸி டிரைவர் தனேஷ் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில், சிறுமிகளின் தாய்க்கு பங்கு உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: “பாலியல் தொழில் பண்ணா தான் அதிகம் சம்பாதிக்க முடியும்” காசுக்காக தம்பதி செய்த செயல்..