fbpx

வெளியானது துணிவு படத்தின் “சில்லா சில்லா” பாடல்!!!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் 3-வது படம் இது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் கதை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் அப்டேட் கேட்டு இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர் அஜித் ரசிகர்கள், இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கையில் துப்பாக்கியுடன் அஜித் இருக்கும் துணிவு படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. மேலும் படத்தின் “சில்லா சில்லா” பாடல் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளர் ஜிப்ரான் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சில்லா சில்லா பாடல்10sec பகுதி இணையத்தில் லீக் ஆகி வைரலானது. இந்நிலையில் இன்று 6.30 மணிக்கு சில்லா சில்லா பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. ஜிப்ரான் இசையமைத்து இருக்கும் அந்த பாடலை அனிருத் பாடி இருக்கிறார். இந்த பாடல் கேட்பதற்கு செம்ம மாஸாக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Kathir

Next Post

#mandous: இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...? முழு பட்டியல்...

Sat Dec 10 , 2022
கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 4 மணி அளவில் புயல் கரை கடந்தது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், கிருஷ்ணகிரி,விழுப்புரம், காஞ்சிபுரம், திருவாரூர், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று […]

You May Like