fbpx

பெற்றோரை வெளியே அனுப்பிவிட்டு சிறுமியிடம் சில்மிஷம்..!! மருத்துவர் செய்யும் காரியமா இது..!! புதுக்கோட்டையில் அதிர்ச்சி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் மஜித் (வயது 37). பல் மருத்துவரான இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக திருவப்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கிய நிலையில், சிறுமியிடம் மருத்துவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக, சிறுமியின் மீது சபலம் ஏற்பட்டு சிறுமியின் பெற்றோரிடம் குறிப்பிட்ட மருந்தை எழுதிக் கொடுத்து அதனை வெளியில் இருந்து வாங்கி வருமாறு அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து, பெற்றோரும் சிறுமியை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு மருந்து வாங்க வெளியே சென்றுள்ளனர். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட மருத்துவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி மருத்துவரிடம் இருந்து தப்பி வெளியே ஓடி வந்துள்ளார். அதே நேரத்தில் மருந்து வாங்கச் சென்ற சிறுமியின் பெற்றோரும் மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர், நடந்தவற்றை சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் கூறியுளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவ மீது காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி மருத்துவர் அப்துல் மஜீத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read More : வயநாடு நிலச்சரிவு..!! வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கும் உடல்கள்..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

English Summary

Doctor Abdul Majeed was arrested under the POCSO Act and jailed for allegedly sexually harassing the girl.

Chella

Next Post

பிரபல ஷெஃப் குணால் கபூரின் விவாகரத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை..!!

Tue Jul 30 , 2024
Supreme Court Stays Chef Kunal Kapur's Divorce Granted On Grounds Of Cruelty

You May Like